Tuesday, April 15, 2014

முகப்புத்தகத்தில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.....?

இணையத்தில் பலரும் திண்டாடுவது தமிழ் பக்கங்களை பார்க்க முடியவில்லையே , தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லையே என்பதாகும். ஆங்கில மொழியானது தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதை மறுக்க முடியாது.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் முகமாக GOOGLE நிறுவனம் தற்போது மென்பொருள் ஒன்றை நிறுவியுள்ளது. அது தான் GOOGLE IME அதாவது (GOOGLE INPUT METHOD EDITORS) என்பதாகும்.

AZHAKI, UNICODE, NHM WRITER எனப் பல மென்பொருட்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பயன்படுத்துவதும் கடினம், 100% பயனளிப்பதுமில்லை.

GOOGLE IME மென்பொருள் மூலம் நீங்கள் மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் தமிழில் தட்டச்சு செய்ய முடிவதுடன். இணைய உலாவியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி தட்டச்சு செய்ய முடியும். அதுவும் எந்தவிதமான இணைய இணைப்பும் இல்லாமல்.

இது தமிழ் மொழியில் மட்டுமல்லாது  ஹிந்தி, மலையாளம், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளிலும் தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியவாறு உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் இனி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை.

சரி இதை எப்படி தரவிறக்கம் செய்வது.....

கீழே உள்ள நீட்சியில் சென்று உங்கள் மொழியை தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்


NOTE : THIS IS ONLINE INSTALLING SOFTWARE.

INSTALL செய்து முடிந்ததும், உங்கள் திரையின் (DESKTOP) வலது பக்க கீழ் மூலையில் பாருங்கள், படத்தில் கட்டியவாறு காணப்படும் 

EN அல்லது ENG என்று காணப்படும்.

WINDOWS 7 இயங்குதளத்திற்கு EN என்று காணப்படும், 
WINDOWS 8/8.1 இயங்குதளத்திற்கு ENG என்று காணப்படும்


ENG அல்லது EN என்பதை CLICK செய்து தமிழ் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும், படத்தில் காட்டியவாறு



இப்பொழுது நீங்கள் இலகுவாக தமிழில் தட்டச்சு செய்ய முடியும் எங்கு வேண்டுமானாலும்.

தட்டச்சு செய்யும் போது தமிழுக்கு மாற்றியபின், ஆங்கிலத்தில் "AMMA" என்று தட்டச்சு செய்தால் "அம்மா" என்று தட்டச்சு செய்யப்படும். 

இதனை தமிழ் , ஆங்கிலம் என மாற்றுவதற்கு சுருக்கக் குறியீடும் (SHORTCUT) நீங்கள் கொடுத்து பயன்படுத்தலாம்.

NOTE : WINDOWS 8 & 8.1 DEFAULT SHORTCUT KEY IS {"WINDOWS KEY + SPACE BAR"}

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.....

No comments:

Post a Comment